10%, Pension, AHV பெற்றுத்தரப்படும்!

சேவைகள்

10%, பென்சன், விதவை பென்சன், Early pension, சொந்த வீடு வாங்குவதற்காக உங்கள் பென்சன் பணம், AHV போன்றவைகளை மீளப்பெறுதல்

சுவிஸில் வாழ்ந்த குடும்பத்தலைவனின் மறைவுக்குப் பின் அவரினால் உழைத்த 10%, Pension, AHVபணங்கள் அவரின் மனைவிக்குக் கிடைக்க வழிவகைகள் செய்து தரப்படும். அதாவது மனைவி சுவிஸைத்தவிர வேறு நாடுகளில் வாழ்ந்துகொண்டிருந்தால் மாத்திரமே மொத்தத்தொகையும் கிடைக்கும். அத்துடன் அவர்களின் 18 வயதிற்குக் குறைந்த குழந்தைகள் சுவிஸில் வாழ்வார்களாயின் அப்பணத்திற்காக விண்ணப்பம் செய்ய முடியாது. அத்துடன் மறைந்த கணவரின் பென்சன், AHV பணம் மாதாந்தம் கிடைக்க வழிவகைகள் செய்து தரப்படும். மனைவி, பிள்ளைகள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களுக்குரிய பணம் கிடைக்க ஒழுங்குகள் செய்து தரப்படும்.

விசா ஒழுங்குகள்

சுவிஸில் இருந்து நீங்கள் எந்த நாட்டிற்கு செல்ல விரும்பினாலும் உங்களுக்கு விசா ஒழுங்குகள் செய்து தரப்படும். நீங்களாகவே விண்ணப்பித்து அவை நிராகரிக்கப்பட்டால் அவ் வகையான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

காப்புறுதிச்சேவை

உங்கள் பெற்றோர்கள் இலங்கை அல்லது வேறு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களாய் இருப்பின் உங்களால் சுவிஸில் நடத்தப்படும் சில வைபவங்களுக்கு வருகை தந்து பின் அவர்கள் தாய் நாட்டிற்கு மீண்டும் செல்வதற்கான விசா ஏற்பாடுகள் செய்து தரப்படும். அத்துடன் அவர்களுக்குரிய காப்புறுதியும் மிக மலிவான முறையில் செய்தும் தரப்படும்.

வெளிநாட்டில் வாழ்வோருக்கான தொழில் அனுமதிப்பத்திரம். (Workpermit)

சுவிஸைத் தவிர்த்து வேறு நாட்டில் வாழும் நீங்கள் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் உங்கள் நண்பர்கள்/நண்பிகள் மூலமாக உங்களுக்கு சுவிசில் தொழிலினைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தால் அவர்களின் தொழில் விண்ணப்பம் மற்றும் விசா ஒழுங்குகள் சிரமமின்றி பெற்றுத்தரப்படும்.

திருமணப் பதிவு

உங்கள் திருமணப் பதிவுக்குத் தேவையான சகல ஒழுங்குகள் அல்லது நீங்கள் வேறு நாட்டில் மணமுடித்தபின் உங்கள் வாழ்க்கைத்துணையை சுவிசுக்கு அழைக்கும் விண்ணப்பம் மற்றும் விசா ஒழுங்குகள் போன்றவையும் செய்து தரப்படும்.

பென்சன்

நீங்கள் வீடு வாங்குவதற்கு உங்கள் பென்சன் பணம் எடுக்க வேண்டுமா அல்லது உங்கள் பென்சன் இளைப்பாறும் வயதுக்கு முன் (58-60) எடுக்க வேண்டுமா, உடன் தொடர்கொள்ளுங்கள்.

சுவிசில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தின் விண்ணப்பப்படிவம் பூர்த்திசெய்தல்

இலங்கை தூதரகத்தினால் வழங்கப்படும் சகல விண்ணப்பப்படிவங்களும் உங்களுக்கு பூர்த்தி செய்து தரப்படும். உதாரணமாக சுவிசில் பிறந்த குழந்தைகளுக்கு குழந்தைப்பதிவு மற்றும் உங்களுக்குரிய கடவுச்சீட்டு போன்ற ஓழுங்குகளும் செய்து தரப்படும்.

Steuererklärung Formular - வருடா வருடத்திற்குரிய வரிப்பணத்தை குறைத்து செலுத்துதல்.

நீங்கள் குடும்பத்தவராயின் அல்லது தனி நபராயின் நீங்கள் வருடா வருடம் செலுத்தும் பணத்தினை நாம் குறைக்க வழிவகை செய்து தருவோம். அதாவது நீங்கள் மாதம் அல்லது வருடம் உழைக்கும் தொகையையும் எமக்கு ஆதாரப்பூர்வமாக தெரியப்படுத்தினால் அதற்கான ஒழுங்குகள் நாம் செய்து தருவோம். இந்த தொகைக் குறைப்பை அடைவதற்கு நாங்களே உங்களுக்குSteuererklärung Formular வை பூர்திசெய்து தருவோம். நீங்கள் எதை சேர்க்க வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை நாம் சரிவர ஆராய்ந்த பின்னரே செயல்படுவோம். என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

Sozialamt Help (சமூக நல உதவித்தொகை)

உங்கள் குடும்பத்தவர்களுக்கு சுவிஸில் மாதாந்தம் கிடைக்கும் உதவித்தொகை சரியானதா அல்லது குறைவாக வழங்கப்படுகின்றதா என்பதையும் எம்முடன் தொடர்புகொண்டு நிவர்த்திசெய்து கொள்ளுங்கள்.

வீட்டு வங்கிக்கடன்

வீட்டு வங்கிக்கடன் மிக குறைந்த வட்டிவீதத்தில் செய்து தரப்படும் அத்துடன் வீடு வாங்கிய பின் 3 மாதத்திற்கு ஒருமுறை வங்கிக்கு வட்டிப்பணம் செலுத்தலாம்.

நீங்கள் எந்த இடத்திலும் வாழ்பவர்களாக இருந்தாலும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே நீங்கள் வங்கிக்கடனுக்கு விண்ணப்பித்து அவை நிராகரிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிற்கான காரணத்தை ஆராய்ந்து உங்களுக்கு வங்கிக்கடன் பெற வழிவகை செய்து அத்துடன் வீடு உங்கள் பெயரில் வரும் வரை தேவையான சகல ஒழுங்குகளும் செய்து தருவோம்.

வங்கிகளின் படிவங்கள் கையெழுத்து இடும் முன் எங்களுடன் தொடர்பு கொண்டால் நீங்கள் எதிர்பார்த்த வட்டியைவிட நாம் குறைந்த வட்டி வீதத்தில் செய்து தருகின்றோம் என்பதை எவ்வித சந்தேகமும் இன்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

நீங்கள் சமர்ப்பிக்கும் சகல விண்ணப்பங்களும் படிவங்களும் உண்மையானதாக இருத்தல் வேண்டும்.

குறிப்பு:


1) உங்கள் கணவர் இறந்திருந்தால் அவரின் சுவிசில் உழைத்த பணத்தில் கழிக்கப்பட்ட பணத்தினை அவர் மறைந்து 5 வருடத்திற்குள் விண்ணப்பம் செய்தால் அவரின் மனைவிக்கு பெற வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் அவர் மறைந்து 5 வருடத்திற்குப் பின் மனைவி விண்ணப்பிப்பாராயின் அவை அவரின் மனைவிக்கு கிடைக்காது. இது சுவிசின் சட்டம்.

2) மணமுடியாத நபரின் உழைத்த பணம் அவரின் மறைவுக்குப்பின் அவர்களின் உறவுகளுக்கு கிடைக்காது. அது எவ்வளவு தொகையாக இருப்பினும் அவை கிடைக்க வாய்ப்புக்கள் இல்லை.

தமிழர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்